தங்கம் விலை அதிரடி சரிவு… இன்றைய நிலவரம் இது தான்!

 

தங்கம் விலை அதிரடி சரிவு… இன்றைய நிலவரம் இது தான்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தின் போது தங்கம் விலை எதிர்பாரத அளவுக்கு உயர்ந்தது. அச்சமயம் தொழில்துறையில் நிலவிய தேக்கம் முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திசை திருப்பியது. இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து தங்கம் விலை வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்தது. தற்போது மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருப்பதால் தொழில்துறையில் தேக்கம் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாக, தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்திக்கிறது.

தங்கம் விலை அதிரடி சரிவு… இன்றைய நிலவரம் இது தான்!

இன்றைய நிலவரத்தின் படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.4,585க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.36,680க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500க்கும் விற்பனையாகிறது.