‘ஹேப்பி நியூஸ்’.. தங்கம் விலையில் அதிரடி வீழ்ச்சி: எவ்வளவு தெரியுமா?

 

‘ஹேப்பி நியூஸ்’.. தங்கம் விலையில் அதிரடி வீழ்ச்சி: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.104 குறைந்துள்ளது.

பொதுமுடக்க காலத்தில் அதிரடியாக ஏற்றத்தை சந்தித்த தங்கம் விலை ஏழை எளிய மக்களை கடுமையாக பாதிப்படையச் செய்தது. தங்கம் விலை சுமார் ரூ.43 ஆயிரத்தை எட்டியதோடு, மேலும் உயரும் என பரவிய தகவல் மக்களை அதிருப்தி அடையச் செய்தது. இதற்கு முக்கிய காரணம், தங்கக் காசுகளின் மீதான முதலீடு அதிகரித்ததே. பொதுமுடக்கம் தொடர்ந்தால் தங்கம் விலை உயருவதில் சந்தேகமில்லை என கூறப்பட்ட நிலையில், தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தங்கம் விலை குறையத் தொடங்கியது.

‘ஹேப்பி நியூஸ்’.. தங்கம் விலையில் அதிரடி வீழ்ச்சி: எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.104 குறைந்து ரூ.4,644க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.832 குறைந்து ரூ.37,152க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.80 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.64.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.64,500க்கும் விற்பனையாகிறது.