2 நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை சற்று குறைந்தது

 

2  நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை சற்று குறைந்தது

கொரோனா நோய்த் தொற்று இந்தியாவில் மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கியது. அதனால் நாடு முழுவதும் லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. இதனால், நாட்டின் பெரிய கடைகள் எதுவும் திறக்கப்பட வில்லை. அவற்றில் நகைக் கடைகளும் அடக்கம். கொரோனா பரவல் குறைவான இடங்களில் லாக்டெளனில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆயினும், குளிர்சாதனம் பொருத்திய பெரிய கடைகளைத் திறக்க அனுமதிக்க வில்லை. அதனால், பெரிய நகைக்கடைகள் இயங்க வில்லை.

2  நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை சற்று குறைந்தது

கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து இப்போது வரை இதுதான் நிலை என்றாலும், தங்கம் விலை குறைய வில்லை. காரணம், மற்ற எதைக் காட்டிலும் தங்கத்தில் முதலீடு செய்வது லாபகரமானது எனப் பலரும் கருதுவதால் ஆன்லைன் பிசினஸ் கொடிகட்டி பறக்கிறது. அதனால் தங்கத்தில் விலை வெகுவாக குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இன்றைய (ஜூலை 20) நாளில் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை 1 கிராம் 4,695 ரூபாய்க்கும் ஒரு பவுண் (8 கிராம்) 37,560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு சற்று விலை குறைந்துள்ளது.

2  நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை சற்று குறைந்தது

இது நேற்றைய விலையோடு ஒரு கிராம்க்கு 9 ரூபாய் குறைவு. ஒரு பவுனுக்கு 72 ரூபாய் குறைவு. நேற்றைய விலை ஆபரணத் தங்கம் (22 கேரட்) ஒரு கிராம் 4,704 ரூபாய்க்கும் ஒரு பவுண் விலை 37,632 ரூபாய்க்கும் விற்றது.