‘தொடர் ஏற்றத்துக்கு பின்’ சரிந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

 

‘தொடர் ஏற்றத்துக்கு பின்’ சரிந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.22 குறைந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் தங்கம் விலை அதிரடியாக ஏற்றத்தை சந்தித்தது. இதுவரை இல்லாத அளவுக்கு அச்சமயம் தங்கம் விலை உயர்ந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கம் விலை மீண்டும் எப்போது குறையும் என மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தனர். இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தங்கம் விலை குறையத் தொடங்கியது. ரூ.43 ஆயிரத்தில் இருந்து ரூ.37 ஆயிரம் வரை குறைந்த தங்கம் விலை, கடந்த ஒரு வாரமாக தொடர் ஏற்றத்தை சந்தித்து மீண்டும் ரூ.38 ஆயிரத்தை எட்டியது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சரிந்துள்ளது.

‘தொடர் ஏற்றத்துக்கு பின்’ சரிந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 குறைந்து ரூ.4,747க்கு விற்பனையாகிறது. அதன் படி சவரனுக்கு ரூ.176 குறைந்து ரூ.37,976 க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.60க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,600க்கும் விற்பனையாகிறது.