ரூ.38 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது தங்கம் விலை!

 

ரூ.38 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.38 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் எதிர்பாராத அளவுக்கு தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்தது. பொருளாதார வீழ்ச்சி, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட பல முக்கிய காரணங்களால் தங்கம் விலை ரூ.43 ஆயிரத்துக்கு மேல் எட்டியது ஏழை, எளிய மக்களை அதிர்ச்சி அடையச் செய்தது. இதை தொடர்ந்து, பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பொருளாதாரம் மீண்டெழ தொடங்கியதால் தங்கம் விலை குறையத் தொடங்கியது.

ரூ.38 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது தங்கம் விலை!

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 குறைந்து ரூ.4,747க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.264 குறைந்து ரூ.37,976க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.66.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.66,700க்கும் விற்பனையாகிறது.