அதிரடி சரிவு : ரூ.36 ஆயிரத்திற்கு கீழ் தங்கம் விலை!

 

அதிரடி சரிவு : ரூ.36 ஆயிரத்திற்கு கீழ் தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தங்கம் விலை அதிரடியாக ஏற்றத்தைக் கண்டது. கிட்டத்தட்ட ரூ.43 ஆயிரத்தை எட்டிய ஆபரணத் தங்கத்தின் விலை , அதற்கு மேலும் உயரும் என பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது பொதுமுடக்கம் நீடித்தாலோ அல்லது தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வந்தாலோ தங்கம் விலை ரூ.50 ஆயிரத்தை எட்டும் என கூறப்பட்டது. ஆனால், நல்ல வேளையாக பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் முதலீடுகள் குறைந்தது. அதன் பிறகு, கணிசமாக குறைந்து வந்த தங்கம் விலை அவ்வப்போது ஏற்றத்தைக் கண்டாலும், பெரிதளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை.

அதிரடி சரிவு : ரூ.36 ஆயிரத்திற்கு கீழ் தங்கம் விலை!

இந்த நிலையில், சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 குறைந்து ரூ.4,497க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.256 குறைந்து ரூ.35,976க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,200க்கும் விற்பனையாகிறது.