விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை.. ஒரு மாதத்தில் ரூ.7,178 கோடிக்கு தங்கத்தை இறக்குமதி செய்த வர்த்தகர்கள்

 

விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை.. ஒரு மாதத்தில் ரூ.7,178 கோடிக்கு தங்கத்தை இறக்குமதி செய்த வர்த்தகர்கள்

கடந்த ஜூன் மாதத்தில் நம் நாட்டில் தோரயமாக ரூ.7,178 கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் சுமார் 60 சதவீதம் அதிகமாகும்.

நம் நாட்டில் திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள் என எந்தவொரு குடும்ப விழாக்களிலும் தங்கம் பிரதானமாக இருக்கும். மஞ்சள் உலோகமான தங்கம் சிறந்த முதலீடாகவும் கருதப்படுகிறது. மேலும் இக்கட்டான நேரங்களில் நிதி தேவைக்கு கொடுக்கும் என்பதால்தான் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் மக்கள் வாங்கும் அளவு வேண்டுமானால் குறையுமே தவிர வாங்காமல் இருக்கமாட்டார்கள்.

விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை.. ஒரு மாதத்தில் ரூ.7,178 கோடிக்கு தங்கத்தை இறக்குமதி செய்த வர்த்தகர்கள்
தங்க பிஸ்கட்

அதேசமயம் நம் நாட்டில் தங்கம் உற்பத்தி பெயரளவுக்கே நடைபெறுகிறது. இதனால் உள்நாட்டு தங்க தேவையை பூர்த்தி செய்ய வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. சர்வதே அளவில் சீனாவுக்கு அடுத்து தங்கம் அதிகம் இறக்குமதி செய்யும் நாடு என்றால் அது நம் நாடுதான். கொரோனா வைரஸ் 2வது அலை காரணமாக நம் நாட்டில் பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தின. இதனால் அந்த கடந்த மே மாதத்தில் தங்க நகைக்கடைகள் சரியாக திறக்கப்படவில்லை. இதனால் அந்த மாதத்தில் நம் நாட்டில் தங்கம் விற்பனை சுமாராக இருந்தது.

விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை.. ஒரு மாதத்தில் ரூ.7,178 கோடிக்கு தங்கத்தை இறக்குமதி செய்த வர்த்தகர்கள்
தங்க நகை

கடந்த மே மாதத்தில் ரூ.5,024 கோடிக்கு (67.90 கோடி டாலர்) தங்கம் இறக்குமதியாகி இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, கடந்த மாதம் (ஜூன்) பல மாநிலங்கள் லாக்டவுன் கட்டுப்பாடுகளை தளர்த்தின. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மீண்டும் நடைபெற தொடங்கின, நகைக்கடைகள் திறக்கப்பட்டன. இதனால் அந்த மாதத்தில் தங்கம் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.7,178 கோடிக்கு (97 கோடி டாலர்) தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் சுமார் 60 சதவீதம் அதிகமாகும். எதிர்வரும் மாதங்களில் தங்கம் விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் தங்க வியாபாரிகள் அதிகளவில் இறக்குமதி செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.