தங்கத்தையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்…. ஆனாலும் ரூ.4,626 கோடிக்கு தங்கம் இறக்குமதி…

நம் நாட்டில் திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள் என எந்தவொரு குடும்ப விழாக்களிலும் தங்கம் பிரதானமாக இருக்கும். மஞ்சள் உலோகமான தங்கம் சிறந்த முதலீடாகவும் கருதப்படுகிறது. மேலும் இக்கட்டான நேரங்களில் நிதி தேவைக்கு கொடுக்கும் என்பதால்தான் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் நம்மவர்கள் வாங்குவது குறையுமே தவிர வாங்காமல் இருக்கமாட்டார்கள்.

தங்க கட்டிகள்

கடந்த ஜூன் மாதத்தில் அளவு அடிப்படையில் மொத்தமே 11 டன்கள் மட்டுமே தங்கம் இறக்குமதியாகியுள்ளது. மதிப்பு அடிப்படையில், ரூ.4,626 கோடிக்கு தங்கம் இறக்குமதியாகியுள்ளது. 2019 ஜூன் மாதத்தில் மொத்தம் ரூ.20,500 கோடிக்கு 77 டன் தங்கம் இறக்குமதியாகி இருந்தது என அரசு வட்டராங்கள் தெரிவித்தன. தங்கம் விலை உச்சத்தில் இருப்பது, கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு அமல்படுத்திய லாக்டவுனால் பல பெரிய நகைக்கடைகள அடைக்கப்பட்டு இருந்தன, வெளிநாட்டுக்கு செல்ல தடை போன்ற காரணங்களால் தங்கம் விற்பனை குறைந்து விட்டது. இதன் எதிரொலியாக தங்கம் இறக்குமதி கடந்த ஜூன் மாதத்தில் 86 சதவீதம் குறைந்துள்ளது.

தங்க நகைகள்

அதேசமயம் நம் நாட்டில் தங்கம் உற்பத்தி பெயரளவுக்கே நடைபெறுகிறது. இதனால் உள்நாட்டு தங்க தேவையை பூர்த்தி செய்ய வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. சர்வதே அளவில் சீனாவுக்கு அடுத்து தங்கம் அதிகம் இறக்குமதி செய்யும் நாடு என்றால் அது நம் நாடுதான். கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக மார்ச் இறுதி வாரம் முதல் மே 3 வரை நம் நாட்டில் நகை கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் தங்க விற்பனை முற்றிலும் முடங்கி போனது. கடந்த மே 4ம் தேதி முதல் நகை கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இருப்பினும் தங்க விற்பனை மிகவும் மந்தகதியில் இருந்தது.

Most Popular

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையை தமிழில் வெளியிட்ட ஆர்வலர்கள்!

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையை தமிழில் மொழி பெயர்த்து வழங்க முடியுமா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், தமிழில் அதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வெளியிட்டிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது. மத்திய அரசு...

“முதலிரவில் முடிந்த வாழ்க்கை”- படுக்கையில் இருந்த காதலர்கள் -தீ வைத்து கொளுத்திய குடும்பத்தினர்கள்-

உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் உள்ள கார்ச்சா கிராமத்தில் போலா என்ற 23 வயது வாலிபரும் ,ப்ரியங்கா என்ற 20 வயது பெண்ணும் காதலித்தனர் .ஆனால் அவர்களின் காதலுக்கு அந்த பெண்ணின் வீட்டில் கடுமையான...

‘எஸ்.வி சேகரை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை’.. அமைச்சர் காமராஜ் பேட்டி

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு அளித்தும் முதல்வர் பழனிசாமியை விமர்சித்தும் எஸ்.வி சேகர் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் உங்கள் கட்சிக்கு அம்மா திராவிட...

“50 லட்சத்தை 25லட்சமாக குறைத்து முன்களப் பணியாளர்களின் தியாகத்தை சிறுமைப்படுத்தாதீர்கள் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை பணயம் வைத்து உழைத்து கொண்டிருக்கும் முன்கள பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அளிக்கப்படும் என...