மீண்டும் சரிவில் தங்கம் விலை : இன்றைய நிலவரம் என்ன?

 

மீண்டும் சரிவில் தங்கம் விலை : இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகளை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பொதுமுடக்கத்தின் போது முதலீடுகள் அதிகமாக இருந்ததால், தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. தற்போது முதலீடுகள் அமெரிக்க டாலர்கள் மற்றும் பங்குச் சந்தை பக்கம் திசை மாறியிருப்பதால் தங்கம் விலை குறைந்து வருகிறது. கடந்த 2ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் ஏற்றத்தைக் கண்ட நிலையில் தற்போது மீண்டும் குறைந்திருக்கிறது.

மீண்டும் சரிவில் தங்கம் விலை : இன்றைய நிலவரம் என்ன?

இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்து ரூ.4,506க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.36,048க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72.90க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,900க்கும் விற்பனையாகிறது.