இறக்குமதி வரி குறைப்பு : அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை!

 

இறக்குமதி வரி குறைப்பு : அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான தேவை அதிகரித்ததால் தங்கம் விலை எதிர்பாரத அளவுக்கு உயர்ந்தது. கிட்டத்தட்ட ரூ.43 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்த தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டு தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்ததால் தங்கம் விலை கணிசமாக குறைந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தங்கம் விலை இறங்கு முகமாகவே இருந்து வந்தது.

இறக்குமதி வரி குறைப்பு : அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை!

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ. 4,535க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.36,280க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.60 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.75,200க்கும் விற்பனையாகிறது. பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைவால் ஒரு வாரமாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று ஏற்றத்தை கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.