தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

 

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்துள்ளது.

கடந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. ரூ.36 ஆயிரத்துக்கு மேல் விற்கப்பட்டு வந்த தங்கம் விலை ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் சென்றது சாமானிய மக்களை மகிழ்ச்சி அடையச் செய்தது. பின்னர், தங்கம் விலை மீண்டும் அதிகரித்து கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்தது. இந்த நிலையில், செப்டம்பர் மாத தொடக்கத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.4,456க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.16 அதிகரித்து ரூ.35,648க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை 40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,700க்கும் விற்பனையாகிறது.