ரூ.35 ஆயிரத்தில்… தொடர்ந்து சரியும் தங்கம் விலை!

 

ரூ.35 ஆயிரத்தில்… தொடர்ந்து சரியும் தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்துள்ளது.

பொதுமுடக்கத்தின் போது தொழில்துறையில் நிலவும் தேக்கத்தால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து விலையும் உயரும். கடந்த ஆண்டு தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்ததால் தங்கம் விலை, வரலாறு காணாத அளவுக்கு ஏற்றத்தைக் கண்டது. ஆனால், இந்த முறை தேக்கம் குறித்த அச்சம் நிலவியதால் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்தது. குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

ரூ.35 ஆயிரத்தில்… தொடர்ந்து சரியும் தங்கம் விலை!

இன்றைய நிலவரத்தின் படி, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.4,455க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.35,640க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை 40 காசுகள் குறைந்து ரூ.74.00க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.74,400க்கும் விற்பனையாகிறது.