மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. அதிர்ச்சியில் சாமானிய மக்கள்!

 

மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. அதிர்ச்சியில் சாமானிய மக்கள்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 உயர்ந்துள்ளது.

கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட லாக் டவுன் காலக்கட்டத்தில் நிலவிய தொழில்துறை தேக்கத்தால் தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. அச்சமயத்தில் தங்கம் விலை ரூ.43 ஆயிரத்துக்கு மேல் உயர்நது பேரதிர்ச்சி அளித்தது. முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பாதுகாத்துக் கொள்ள, தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்ததால் தங்கம் விலை ஏற்றத்தை கண்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, இயல்பு நிலை திரும்பியதும் தங்கம் விலை கணிசமாக குறையத் தொடங்கியது. பெரும்பாலான நாட்களில் தங்கம் விலை சரிந்து வரும் நிலையில், ஒரு சில நாட்கள் ஏறுமுகமாகவும் இருக்கிறது.

மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. அதிர்ச்சியில் சாமானிய மக்கள்!

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 உயர்ந்து ரூ.4,258க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ரூ.34,064க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,500க்கும் விற்பனையாகிறது.