அதிரடியாக ஏற்றத்தைக் கண்ட தங்கம் விலை!

 

அதிரடியாக ஏற்றத்தைக் கண்ட தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்துள்ளது.

பொதுமுடக்க காலத்தில் தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தைக் கண்டதை அனைவரும் அறிவோம். கிட்டத்தட்ட ரூ.43 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்து நடுத்தர மக்களுக்கு ஷாக் கொடுத்தது. அக்காலக்கட்டத்தில் நிலவிய தொழில்துறை தேக்கம் முதலீட்டாளர்களை தங்கத்தின் வசம் திசை திருப்பியது. தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்க அதிகரிக்க, தங்கம் விலையும் தொடர் ஏற்றத்தைக் கண்டது. இதையடுத்து, கடந்த 2 மாதங்களாக தங்கம் விலை குறைந்து கொண்டே வருகிறது. ஓரிரு நாட்களில் மட்டும் தங்கம் விலை திடீரென உயர்ந்து அதிர்ச்சி அளிக்கிறது. அப்படி ஒரு நாள் தான் இன்றும்.

அதிரடியாக ஏற்றத்தைக் கண்ட தங்கம் விலை!

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.4,230க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.33,840க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.71.40க்கும் ஒரு கிலோ ரூ.71,400க்கும் விற்பனையாகிறது.