அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. வாங்குறது கஷ்டம் தான்!

 

அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. வாங்குறது கஷ்டம் தான்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 அதிகரித்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களாக தொடர் சரிவைக் கண்டது. கடந்த மாதம் ரூ.35 ஆயிரத்துக்கு மேல் விற்கப்பட்டு வந்த தங்கம் விலை, தொடர் சரிவையடுத்து ரூ.33 ஆயிரத்துக்கு விற்பனையானது. பொதுமுடக்க காலத்தில் ரூ.43 ஆயிரத்துக்கு மேல் விற்கப்பட்டு வந்த தங்கம் விலை கிட்டத்தட்ட ரூ.10 ஆயிரம் குறைந்து ரூ.33 ஆயிரத்துக்கு வந்த நடுத்தர மக்களை மகிழ்ச்சியடையச் செய்தது. இருந்தாலும், அவ்வப்போது தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து அடுத்தடுத்த ஷாக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. வாங்குறது கஷ்டம் தான்!

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4,239க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.33,912க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.71.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.71,700க்கும் விற்பனையாகிறது.