தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

 

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 அதிகரித்துள்ளது.

தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்ததால், தங்கம் விலை கணிசமாக குறைந்து வந்தது. இம்மாத தொடக்கத்தில் ரூ.37 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த தங்கம் தற்போது ரூ.35 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்திருக்கிறது. இதனிடையே மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தங்கத்தின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், தங்கம் விலை திடீர் ஏற்றத்தை சந்தித்தது. இதைத் தொடர்ந்து, தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் நீடித்து வருகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.4,468க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.16 அதிகரித்து ரூ.35,744க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.90க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,900க்கும் விற்பனையாகிறது.