தங்கம் விலையில் தொடர் சரிவு : இன்றைய நிலவரம் என்ன?

 

தங்கம் விலையில் தொடர் சரிவு : இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்ததால், தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு அதிகரித்தது எல்லாரும் அறிந்தவையே. தற்போது அந்த நிலைமாறி தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தங்கம் விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. தங்கத்தின் மீதான முதலீடுகள் குறையும் இதே நிலை நீடித்தால், தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தங்கம் விலையில் தொடர் சரிவு : இன்றைய நிலவரம் என்ன?

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 குறைந்து ரூ.4,602க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.36,816க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.69.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.69,700க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கடந்த 3 நாட்களாக இதே நிலையில் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.