தொடர்ந்து இறங்குமுகத்தில் தங்கத்தின் விலை…இன்றைய நிலவரம் இதோ!

 

தொடர்ந்து இறங்குமுகத்தில்  தங்கத்தின் விலை…இன்றைய நிலவரம் இதோ!

பொதுமுடக்கக் காலத்தில் தொழில்துறையில் நிலவும் தேக்கத்தால், தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழில்துறை பெரும் பாதிப்பை சந்தித்தது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வருகிறது.

தொடர்ந்து இறங்குமுகத்தில்  தங்கத்தின் விலை…இன்றைய நிலவரம் இதோ!

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,410க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.35,280க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72.90 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,900க்கும் விற்பனையாகிறது.கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில் கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை 37 ஆயிரத்தை தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது