சற்று உயர்ந்தது தங்கம் விலை : இன்றைய நிலவரம் இது தான்!

 

சற்று உயர்ந்தது தங்கம் விலை : இன்றைய நிலவரம் இது தான்!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை கணிசமாக குறையத் தொடங்கியது. பெரிதளவில் குறையவில்லை என்றாலும், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தங்கம் விலையில் ஏற்றம் இல்லை. தொடர் சரிவையடுத்து தற்போது தங்கம் விலை ரூ.36 ஆயிரத்தில் நீடிக்கும் நிலையில், விலை மேலும் குறையுமா? அல்லது உயருமா? என்ற குழப்பத்தில் மக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.

சற்று உயர்ந்தது தங்கம் விலை : இன்றைய நிலவரம் இது தான்!

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கம் இன்று கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.4,622க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.36,976க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.70.60க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,600க்கும் விற்பனையாகிறது.