‘தங்கம் விலை மீண்டும் சரிவு’: இன்றைய நிலவரம் என்ன?

 

‘தங்கம் விலை மீண்டும் சரிவு’: இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது, தங்கம் விலை எதிர்பாராத விலை ஏற்றத்திற்கு வித்திட்டது. கிட்டத்தட்ட ரூ.43 ஆயிரத்துக்கு மேல் தங்கம் விலை உயர்ந்து, பேரதிர்ச்சி அளித்தது. முதலீடு குறைந்தால் தங்கம் விலை குறையும் என்று கூறப்பட்டதன் படி, தற்போது முதலீடுகள் குறைந்திருப்பதால் தங்கம் விலை கணிசமாக குறைந்து வருகிறது. கொரோனா வைரஸால் தொழில்துறையில் தேக்கம் குறித்த அச்சம் எழுந்து வருவதும், தங்கம் விலை ஏற்ற இறக்கத்திற்கு வழி வகுக்கிறது.

‘தங்கம் விலை மீண்டும் சரிவு’: இன்றைய நிலவரம் என்ன?

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் கிராமுக்கு ரூ.38 குறைந்து ரூ.4,662க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.37,296க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.10க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,100க்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து 6 நாட்களாக தங்கம் விலை குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.