‘சரிந்தது தங்க விலை’ ஒரு கிராம் தங்கம் ரூ.4,805க்கு விற்பனை!

 

‘சரிந்தது தங்க விலை’ ஒரு கிராம் தங்கம் ரூ.4,805க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்திருக்கிறது.

கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்த காலத்தில், நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இது தங்க விலையில் எதிரொலித்தது. கடந்த டிசம்பர் மாதம் வரையிலே ரூ.30 ஆயிரத்துக்குள் நீட்டித்து வந்த தங்க விலை, சுமார் 43 ஆயிரம் ரூபாயை எட்டி வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்தது. பொருளாதார சரிவு, தங்க வரத்து குறைவு நீடித்தால் விலை மேலும் உயரும் என கூறப்பட்டது. ஆனால், அதன் பிறகு கணிசமாக குறைந்து வந்த தங்க விலை தற்போது 38 ஆயிரத்தில் நீடிக்கிறது.

‘சரிந்தது தங்க விலை’ ஒரு கிராம் தங்கம் ரூ.4,805க்கு விற்பனை!

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,805க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.38,440க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.40 குறைந்து ரூ.62.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.