காட்மேன் வெப்சீரீஸ் டீஸர் சர்ச்சை; தயாரிப்பாளர், இயக்குநருக்கு முன்ஜாமீன்!

 

காட்மேன் வெப்சீரீஸ் டீஸர் சர்ச்சை; தயாரிப்பாளர், இயக்குநருக்கு முன்ஜாமீன்!

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், இளங்கோ ரகுபதி தயாரிப்பில் உருவாக்கியுள்ளது வெப்சீரிஸ் “காட்மேன்”. இதில் ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த சீரீஸ் வரும் 12 ஆம் தேதி இணையதளத்தில் வெளியாகவிருந்தது. இதனிடையே காட்மேனின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், திரைப்படத்தில் பிராமணர்களை பற்றியும் இந்து மதத்தைப் பற்றியும் அவதூறான கருத்துக்களும் இழிவுப்படுத்தும் காட்சிகள் வசனங்கள் இடம் பெற்றிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் சீரியலில் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. டிரெய்லர் வெளியாகிய உடனே இது பல விமர்சனங்களை பெற்ற நிலையில், அதன் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

காட்மேன் வெப்சீரீஸ் டீஸர் சர்ச்சை; தயாரிப்பாளர், இயக்குநருக்கு முன்ஜாமீன்!

இந்நிலையில் படத்தின் கருத்துக்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமே தவிர, வெறுப்புணர்வை ஏற்படுத்தக் கூடாது எனக்கூறிய சென்னை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், காட்மேன் வெப்சீரீஸ் டீஸர் தொடர்பாக பிராமணர் சங்கம் கொடுத்த புகாரில் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் தயாரிப்பாளர் இளங்கோ ரகுபதி இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கியினார். இதைதொடர்ந்து, இணைய தளத்தில் காட்மேன் டீசர் நீக்கப்பட்டு, டீசரின் பதிவு காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் மன்றத்தில், ₹ 10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்தி ஜாமீன் பெற வேண்டும் என்றும் விசாரணைக்கு தேவைப்படும்போது மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் இருவரும் ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனைகள் வழங்கப்பட்டன. மேலும் சாட்சிகளையும், ஆதாரங்களையும் கலைக்க கூடாது என்றும் தலைமறைவாக கூடாது என்றும் பாபு யோகஸ்வரன் மற்றும் இளங்கோ ரகுபதிக்கு நீதிபதி செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்தார்.

காட்மேன் வெப்சீரீஸ் டீஸர் சர்ச்சை; தயாரிப்பாளர், இயக்குநருக்கு முன்ஜாமீன்!

எந்த குறிப்பிட்ட மதத்தினரையோ, சமுதாயத்தினரையோ, நம்பிக்கையையோ குலைக்கும் வகையில் தொடர் எடுக்கப்படவில்லை என்றும் தன்னை சாமியார் என கூறிக் கொண்டு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைப் பற்றியே படத்தில் பேசப்பட்டுள்ளதாகவும் பிராமணர்களுக்கு எதிராக பேசப்படவில்லை மனுதாரர்கள் தெரிவித்தனர்.