காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா லாபம் ரூ.112 கோடி.. வருவாய் 59 சதவீதம் அதிகரிப்பு

 

காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா லாபம் ரூ.112 கோடி.. வருவாய் 59 சதவீதம் அதிகரிப்பு

காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.112.40 கோடி ஈட்டியிருந்தது.

சிகரெட் தயாரிப்பு நிறுவனமான காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2021 ஜூன் காலாண்டில் காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.112.40 கோடி ஈட்டியிருந்தது. இது சென்ற ஆண்டின் இதே காலண்டைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாகும்.. 2020 ஜூன் காலாண்டில் காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியாவின் நிகர லாபம் ரூ.55.58 கோடியாக இருந்தது.

காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா லாபம் ரூ.112 கோடி.. வருவாய் 59 சதவீதம் அதிகரிப்பு
காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா

2021 ஜூன் காலாண்டில் காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் ரூ.735.49 கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 59 சதவீதம் அதிகமாகும். 2020 ஜூன் காலாண்டில் காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியாவின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.462.57 கோடியாக இருந்தது.

காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா லாபம் ரூ.112 கோடி.. வருவாய் 59 சதவீதம் அதிகரிப்பு
சிகரெட்

கடந்த ஜூன் காலாண்டில் காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.630.90 கோடியாக உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபிறகு காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.19 சதவீதம் குறைந்து ரூ.981.00ஆக இருந்தது.