#Gobichettipalayam அமைச்சர் செங்கோட்டையன் கோட்டை உடையுமா?

 

#Gobichettipalayam அமைச்சர் செங்கோட்டையன் கோட்டை உடையுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கருத்துக் கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பினும், அதை பொருட்படுத்தாமல் அரசியல் கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான கணிப்புகள் திமுகவுக்கே சாதகமாக இருக்கின்றன. இத்தகைய சூழலில் மக்களின் ஆதரவு யாருக்கு? என்பதை தெரிந்து கொள்ள நமது டாப் தமிழ் நியூஸ் சேனல் தொகுதி வாரியாக கருத்துக் கணிப்பு நடத்தினோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போகும் தொகுதி கோபிசெட்டிப்பாளையம்…

#Gobichettipalayam அமைச்சர் செங்கோட்டையன் கோட்டை உடையுமா?

5 முறை வென்ற அதிமுக:

கோபிசெட்டிப்பாளையம் தொகுதியை பொறுத்தவரையில் அதிமுகவுக்கே மக்களின் ஆதரவு அதிகம். கடந்த 30 ஆண்டுகாலத்தில் இந்த தொகுதியில் அதிமுக 5 முறையும் திமுக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான செங்கோட்டையன் தான் இந்த தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. இந்த முறையும் அவர் தான் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுகவில் இருந்து மணிமாறன் போட்டியிடுகிறார்.

#Gobichettipalayam அமைச்சர் செங்கோட்டையன் கோட்டை உடையுமா?

ஆளப்போவது யார்?

கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் அமைச்சர் செங்கோட்டையனின் செல்வாக்கு சிறிதளவும் குறையவில்லை. இருந்தாலும், அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதால் மக்கள் ஆளுங்கட்சி மீது அப்செட்டாக இருக்கிறார்கள். குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்கு திமுக பக்கம் செல்கிறது என்பதை உணர முடிகிறது.

#Gobichettipalayam அமைச்சர் செங்கோட்டையன் கோட்டை உடையுமா?

இந்த தொகுதி மக்களின் முக்கிய பிரச்னையாக இருப்பது மருத்துவமனை வசதி இல்லை, ஆக்கிரமிக்கப்பட்ட சாலைகள், பஞ்சாயத்துகளில் கழிப்பறைகள் இல்லை என்பது தான். அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் கோபிசெட்டிப்பாளையத்திற்காக ஏதும் செய்யவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். இதனால், இந்த தொகுதி அதிமுக – திமுகவுக்கு இடையே இழுபறியாகத் தான் இருக்கும் என்பது சர்வேயின் முடிவில் தெளிவாகத் தெரிகிறது. கோபிசெட்டிப்பாளையத்தை அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் கைப்பற்றுகிறாரா? அல்லது திமுகவுக்கு தாரை வார்க்கிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..!