கடவுளே முதல்வரானாலும் அனைவருக்கும் அரசாங்க வேலை கொடுக்க முடியாது… பா.ஜ.க. முதல்வர்

கடவுளே முதல்வரானாலும் அனைவருக்கும் அரசாங்க வேலை கொடுக்க முடியாது… பா.ஜ.க. முதல்வர்

நாளையே கடவுள் முதல்வரானாலும் அனைவருக்கும் அரசு வேலை கொடுக்க முடியாது என்று கோவா பா.ஜ.க. முதல்வர் தெரிவித்தார்.

கோவாவின் பானாஜியில் அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் ஆன்லைனில் கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, முதல்வர் பிரமோத் சாவந்த் தனது அரசாங்கத்தின் லட்சிய திட்டமான சுயம்பூர்ணா மித்ராவை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்கீழ், கெஜட் அரசு அதிகாரிகள் கிராமங்கள் சென்று மாநில அரசின் திட்டங்களை கள அளவில் செயல்படுத்த தணிக்கை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடவுளே முதல்வரானாலும் அனைவருக்கும் அரசாங்க வேலை கொடுக்க முடியாது… பா.ஜ.க. முதல்வர்
முதல்வர் பிரமோத் சாவந்த்

அந்த கருத்தரங்கில் பிரமோத் சாவந்த் பேசுகையில் கூறியதாவது: அனைவருக்கும் அரசு வேலை வழங்குவது சாத்தியமில்லை. நாளை காலையில் கடவுள் முதல்வரானாலும், அது (அனைவருக்கும் அரசு வேலை) சாத்தியமில்லை. கிராம்புறங்களில் வேலையில்லாதவர்களுக்கு தகுதியான சிறு வேலைகளை ஏற்பாடு செய்வது போன்ற வேலைகளை நமது சுயம்பூர்ணா மித்ராஸ் ஒருங்கிணைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடவுளே முதல்வரானாலும் அனைவருக்கும் அரசாங்க வேலை கொடுக்க முடியாது… பா.ஜ.க. முதல்வர்
வேலையின்மை

கோவாவின் வேலையின்மை விகிததம் 15.4 சதவீதத்தை தொட்டுள்ள சூழ்நிலையில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அனைவருக்கும் அரசு வேலை வழங்குவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.