#Go back Modi ட்ரெண்டிங்கை ஆரம்பித்த குக் வித் கோமாளி சிவாங்கி, ஓவியா

 

#Go back Modi ட்ரெண்டிங்கை ஆரம்பித்த குக் வித் கோமாளி சிவாங்கி, ஓவியா

4 ஆயிரத்து 486 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். மேலும் 3 ஆயிரத்து 640 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவுள்ளார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, சென்னையில் தீவிர போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாக தொடங்கியுள்ளது. இதுநாள் வரை திமுக மட்டுமே #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துவந்த நிலையில், தற்போது நடிகர் நடிகைகளும் இந்த வேலையை தொடங்கியுள்ளனர். நடிகை ஓவியாவும் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக #GoBackModi என ட்வீட் செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவும் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்தோவியம் வரைந்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதேபோல் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கியும் #GoBackModi என ட்வீட் செய்துள்ளார். இதனை தொடர்ந்து அவர்களது ரசிகர்களும் #GoBackModi என பதிவிட்டு ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.