அதிமுக வழிகாட்டு குழுவில் இடம்பெறாதது மகிழ்ச்சி – அமைச்சர் செங்கோட்டையன்

அதிமுக வழிகாட்டு குழுவில் இடம்பெறாதது மகிழ்ச்சி – அமைச்சர் செங்கோட்டையன்

அதிமுக வழிகாட்டு குழுவில் இடம்பெறாதது மகிழ்ச்சி அளிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த அக்கரைகொடிவேரி கிராமத்தில் அரசின் நல திட்டங்களை தொடங் கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

அதிமுக வழிகாட்டு குழுவில் இடம்பெறாதது மகிழ்ச்சி – அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனோ தடுப்பு பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக பிரதமர்
பாராட்டி உள்ளதாகவும், ஒரு முதலமைச்சரை பாராட்டும் அளவிற்கு அனைத்து
துறைளின் செயல்பாடுகளும் தமிழகத்தில் சிறப்பாக நடந்து வருவதாகவும் கூறினார். மேலும், கட்டாயக்கல்வி திட்டத்தில் மாணவர்களை சேர்க்க
கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான பட்டியல்

அதிமுக வழிகாட்டு குழுவில் இடம்பெறாதது மகிழ்ச்சி – அமைச்சர் செங்கோட்டையன்

வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், இதற்காக 2013ஆம் ஆண்டு முதல் இதுவரையிலும் 943 கோடி ரூபாய்
வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு வழங்க வேண்டிய 372 கோடியை வழங்குவதற்கான பரிசீலனை நிதித்துறையில் உள்ளதாகவும் அவர் கூறினார். பிற மாநிலங்களில் தமிழ்வழி பள்ளிகள் மூடுவது
குறித்து, அந்தந்த மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரதமரிடம் பேசி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார் என்று கூறிய அமைச்சர் செங்கோட்டையன், மஹாராஷ்ட்டிரா
மாநிலத்தில் தமிழ் பள்ளிகள் ஊக்குவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.