Home அரசியல் ரஜினி நல்லவர்களை ஆதரிப்பார்- ஜி.கே வாசன்

ரஜினி நல்லவர்களை ஆதரிப்பார்- ஜி.கே வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் இன்று சென்னை அடையாறு டி.என்.ராஜரத்தினம் கலையரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக தா.ம.க. மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “அரசியல் நாகரீகத்தை மு.க.ஸ்டாலின் கடைபிடிக்க வேண்டும். முதல்வரை விவாதத்திற்கு அழைக்கிறார். விவசாயிகள் போராட்டத்தில் இடைத்தரகர் இருக்கின்றனர். பெட்ரோல், டீசல் விலையை முறைப்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசி இன்னும் சில தினங்களில் போடப்படும் என்பதால் இது தமிழக மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும். கொரோனா தடுப்பூசியில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம். மக்களுக்குபயத்தை ஏற்படுத்த வேண்டாம்.

This image has an empty alt attribute; its file name is g-k-vasan-repeats-what-his-father-did-to-congress.jpg

கட்சியின் பலத்திற்கு ஏற்ற இடங்களை கூட்டணியில் கேட்டு பெறுவோம். ரஜினியின் ஆதரவு பிற கட்சிகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அரசியலில் நல்லவர்களை ஆதரிப்பார் என நினைக்கிறேன். சட்டமன்றத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் குரல் ஒலிக்கும். சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் நீடிப்போம். சைக்கிள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். அப்படி சைக்கிள் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு தனி சின்னத்தில் போட்டியிடுவோம்” எனக் கூறினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“எத்தன சீட்டு கொடுத்தாலும் ஏத்துக்குறோம்… சூரியன் சின்னத்துக்கும் ஓகே” – வேல்முருகன் ஓபன் டாக்!

பெரிய கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக ஒருவழியாக முடித்துவிட்டது. தற்போது சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. சிறிய கட்சிகளைப் பொறுத்தவரை பெரிதாகப் பேரம் பேசாமல் கொடுக்கும் இடங்களைப் பெற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே...

சத்தியமங்கலத்தில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து… அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பிய தம்பதி…

ஈரோடு சத்தியமங்கலம் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை...

சரத்குமார் கட்சிக்கு இத்தனை தொகுதியா?.. வாய் பிளக்கும் கூட்டணி கட்சிகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே எஞ்சியிருக்கின்றன. வரும் 15ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கவிருக்கிறது. அதனால், அரசியல் கட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக தொகுதி பங்கீடு...

கருப்பு-நீல-சிவப்பு சட்டைகளே மீண்டும் வெல்லும் – திருமுருகன் காந்தி முழக்கம்

அறவழிப் போரட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்கக்கோரி திருச்சியில் மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க பேரணி மாநாடு நடைபெற்றது.
TopTamilNews