முதல்வருடன் ஜி.கே.வாசன் சந்திப்பு- தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை

 

முதல்வருடன் ஜி.கே.வாசன் சந்திப்பு- தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக -அதிமுக கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதேபோல் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, தாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் விருப்ப மனுவை விநியோகம், வேட்பாளர்களுக்கான நேர்காணல் என படு பிசியாக உள்ளன. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக, பாஜகவுடனான கூட்டணி தொகுதி பங்கீடு ஒரு வழியாக நிறைவுற்ற நிலையில் தமாகா உடனான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

முதல்வருடன் ஜி.கே.வாசன் சந்திப்பு- தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் தமாகா தலைவர் ஜிகே வாசன் ஆலோசனை நடத்தினார். தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை ஆலோசனை நடத்தினார். அப்போது தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள்ட் தெரிவிக்கின்றனர். தாமக 12 தொகுதிகளை கேட்டுவருவதாகவும், சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவே விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அக்கட்சி தலைவர் ஜிகே வாசன் தெரிவித்திருந்தார்.

அதிமுகவுடனா தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் 2 நாளில் முடிவாகும் என தெரிகிறது.