’டிசம்பர் வரை ரேஷனில் இலவசமாக பொருள்கள் கொடு’ பெண்கள் கூட்டமைப்பின் ஆன்லைன் போராட்டம்

 

’டிசம்பர் வரை ரேஷனில் இலவசமாக பொருள்கள் கொடு’ பெண்கள் கூட்டமைப்பின் ஆன்லைன் போராட்டம்

கொரோனா நோய்ப் பரவல் காரணமாக ஊரடங்கு தொடங்கி நான்கு மாதங்களைக் கடந்துவிட்டது. ஆனால், நோய்த் தொற்று அதிகரித்து வருகிறதே தவிர குறைந்த பாடில்லை. ஏழை எளிய மக்கள் வேலைக்குச் செல்ல முடியாததால் வருமானம் இன்றி தவிக்கின்றனர். அவர்களுக்கான கோரிக்கைகளை முன்னெடுத்து பெண்கள் கூட்டமைப்பு இன்று ஆன்லைன் போராட்டத்தை நடத்துகிறது.

’டிசம்பர் வரை ரேஷனில் இலவசமாக பொருள்கள் கொடு’ பெண்கள் கூட்டமைப்பின் ஆன்லைன் போராட்டம்

ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அறிவித்த இலவச பொருட்கள் கூட  அனைவரையும் சென்றடையவில்லை. ரேஷன் கார்டு ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்ட போது ஏற்பட்ட பல குளறுபடிகளால் ஏராளமானவர்கள் ரேஷன் கார்டுகளை இழந்து ரேஷன் பொருட்களை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். புதியதாக ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் எந்த ஆதாரமும் அற்றவர்களாக ரேஷன் பொருட்களை பெற முடியாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கொரானா  பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டுவரும் வரை பாதுகாப்பது அரசின் கடமை.

’டிசம்பர் வரை ரேஷனில் இலவசமாக பொருள்கள் கொடு’ பெண்கள் கூட்டமைப்பின் ஆன்லைன் போராட்டம்

  1. ரேஷன் கடைகளில் தரமான சுத்தமான பொருட்களை வழங்கிடு.
  2. அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் டிசம்பர் வரை ரேஷன் கடைகளில் விலையில்லாமல் வழங்கிடு.
  3. டிசம்பர் மாதம் வரை இலவச அத்தியாவசிய பொருட்களுடன் மாதம் ரூ.1000 வழங்கிடு.
  4. ரேஷன் கார்டு இல்லாத அனைவருக்கும் போர்க்கால அடிப்படையில் தற்காலிக ரேஷன் கார்டுகள் வழங்கிடு.
  5. கொடுக்கும் இலவச பொருட்களுடன் ஊட்டச்சத்தான தானியங்கள், வீட்டுக்கு தேவையான 16 வகை அத்தியாவசிய பொருட்களை கொடு.
  6. சத்துணவு திட்டத்தின் கீழ் வரும் பள்ளிக் குழந்தைகளின் மதிய உணவு பொருட்களை வீட்டில் வழங்க உறுதிசெய்ய.
  7. இந்திய உணவுக்கழகத்தில் அழுகிப் போகுமுன் தானியங்களை பெறுவதற்கு கோரிக்கை வை!

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆன்லைன் போராட்டத்தை ஒருங்கிணைத்திருக்கிறது பெண்கள் கூட்டமைப்பு.