மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் கேட்ட ராகுல் காந்தி.. சரமாரியாக கிண்டல் அடித்த பா.ஜ.க. அமைச்சர்கள்..

 

மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் கேட்ட ராகுல் காந்தி.. சரமாரியாக கிண்டல் அடித்த பா.ஜ.க. அமைச்சர்கள்..

மத்தியில் மீன்வளத்துறை தனிஅமைச்சகம் இருப்பது கூட தெரியாமல் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் கோரிக்கையை எழுப்பிய ராகுல் காந்தியை மத்திய மீன்வளத்துறை அமைச்சர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கிண்டல் அடித்தனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். புதுச்சேரியில் மீனவர் சமுதாய மக்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பேசுகையில், நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு 3 மசோதாக்களை நிறைவேற்றியது. மீனவர் கூட்டத்தில் விவசாயிகள் பற்றி நான் பேசுவது குறித்து ஆச்சரியப்பட வேண்டும். நான் உங்களை கடலின் விவசாயி என்று கருதுகிறேன். டெல்லியில் நில விவசாயிகளுக்கு அமைச்சகம் இருக்க முடியும் என்றால், கடல் விவசாயிகளுக்கு ஏன் அவ்வாறு இல்லை என்று பேசியிருந்தார். அதாவது மத்தியில் மீன்வளத்துறைக்கு அமைச்சகம் உள்ளநிலையில், மீன்வளத்துறைக்கு அமைச்சகம் இல்லை என்று கூறியதை மத்திய பா.ஜ.க. அமைச்சர்கள் கிண்டல் அடித்துள்ளனர்.

மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் கேட்ட ராகுல் காந்தி.. சரமாரியாக கிண்டல் அடித்த பா.ஜ.க. அமைச்சர்கள்..
கிரிராஜ் சிங்

மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இது தொடர்பாக டிவிட்டரில், இத்தாலியில் தனியாக மீன்வளத்துறை அமைச்சகம் இல்லை. இது வேளாண்மை மற்றும் வனத்துறை அமைச்சகத்தின்கீழ் வருகிறது என்று பதிவு செய்து இருந்தார். மற்றொரு டிவிட்டில், ராகுல் ஜி, 2019 மே 31ம் தேதியன்று மோடி ஜி ஒரு புதிய அமைச்சகத்தை உருவாக்கினார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் ரூ.20,500 கோடியில் ஒரு மாஸ்டர் பிளானை தொடங்கப்பட்டது. இது நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து 2014ம் ஆண்டு வரை அந்த துறைக்காக அரசு செலவிட்ட தொகையை விட பல மடங்கு அதிகம்.

மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் கேட்ட ராகுல் காந்தி.. சரமாரியாக கிண்டல் அடித்த பா.ஜ.க. அமைச்சர்கள்..
ஸ்மிரிதி இரானி

ராகுல் ஜி! புதிய மீன்வளத்துறைக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன் அல்லது நான் வரும் இடத்துக்கு (மீன்வளத்துறை அமைச்சகம்) என்னை அழைக்கவும். மத்திய மீன்வளத்துறை புதுச்சேரி மற்றும் நாடு முழுவதும் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து உங்களிடம் சொல்கிறேன் என்று பதிவு செய்து இருந்தார். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி டிவிட்டரில், அவர்களுக்கு ஒன்று விஷயம்தான் தெரியும். பொய்கள், பயம் மற்றும் தவறான தகவல்களை பரப்புவது என்று பதிவு செய்து இருந்தார்.