Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் கொரோனாவிலிருந்து மீள உதவும் இஞ்சிச்சாறு, அன்னாசிப்பூ தேநீர்!

கொரோனாவிலிருந்து மீள உதவும் இஞ்சிச்சாறு, அன்னாசிப்பூ தேநீர்!

கொரோனா … கண்ணுக்குத் தெரியாத இந்த ஒற்றை செல் உலகையே அச்சத்தில் உறைய வைத்து, நம்மையெல்லாம் வீட்டுச் சிறையில் அடைத்து வைத்துள்ளது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் மருத்துவக்குணம் உள்ள உணவுப்பொருள்களை உண்பதன்மூலம் நம்மைக் காத்துக்கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து சித்த மருத்துவர் மு.கார்த்திகேயனிடம் கேட்டோம்.
“கொரோனா வைரஸ் நம்மை பாதிக்காமலிருக்க எளிய உணவுகளை உட்கொண்டால் போதும். இரும்புச்சத்து, புரதம், துத்தநாகம், வைட்டமின் -சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் நல்லது. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளைக் கொண்டும், சித்த மருத்துவ மரபில் சொல்லப்பட்ட குறிப்புகளைக் கொண்டும் ஆயுஷ் அமைச்சகம் நம் உடலுக்கு பொதுவான எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளும்படி சொல்கிறது.

கொரோனாவிலிருந்து மீள உதவும் இஞ்சிச்சாறு, அன்னாசிப்பூ தேநீர்!

கொரோனாவிலிருந்து மீள உதவும் இஞ்சிச்சாறு, அன்னாசிப்பூ தேநீர்!
கொரோனா காலத்தில் நாம் என்னென்ன சாப்பிடலாம்? என்பதைப் பார்ப்போம்.
குடிநீர் / தேநீர்:
எலுமிச்சைச் சாற்றுடன் சுக்கு, ஏலக்காய், அதிமதுரம் போன்றவற்றை பொடித்துப் போட்டு நாட்டுச் சர்க்கரை சேர்த்து தினமும் காலையில் பருகலாம். இவைதவிர எலுமிச்சைச் சாறு,தேன், நீர் சேர்ந்த பானம் அருந்தலாம். சிறுதானிய சத்துமாவுக் கஞ்சி, இளநீர், மோர், சீரகத் தண்ணீர், துளசி / வெற்றிலை / கற்பூரவல்லி சேர்த்த கஷாயம் பருகலாம்.
கொய்யா, வாழைப்பழம் மற்றும் பாதாம் பருப்பு சாப்பிடலாம்.அன்னாசிப்பூவை தேநீர் போல் பருகலாம். வைட்டமின்-சி அதிகம் உள்ள நெல்லிக்காய் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை காய வைத்து தேநீர் தயாரித்து பருகலாம்.

கொரோனாவிலிருந்து மீள உதவும் இஞ்சிச்சாறு, அன்னாசிப்பூ தேநீர்!
இஞ்சி, மிளகு:
நாம் உண்ணும் அனைத்துவகை உணவிலும் மஞ்சள், மிளகு சேர்த்து உண்ண வேண்டும். நுரையீரல் பாதை தொற்றுகளைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது என்பதால் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பெரும்பாலான கீரைகளில் போலிக் ஆசிட், இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் அவற்றை தினமும் உணவில் சேர்க்கலாம். வெண்டை, அவரை, பீர்க்கங்காய், கேரட், பீன்ஸ் ஆகியவற்றை உண்ணலாம். இஞ்சி, மிளகு, தூதுவேளை இலை, மஞ்சள்தூள் சேர்த்து ரசம் வைத்து வாரம் இருமுறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
முட்டை, மீன் வகைகளை உண்ணலாம். சைவ உணவு உண்பவர்கள் வேகவைத்த கொண்டைக்கடலை, நிலக்கடலை சோயா, பச்சைப் பயறை உணவில் சேர்க்கலாம். இவை நோய் எதிர்ப்பாற்றல் மட்டுமன்றி உடலுக்குத் தேவையான புரதச் சத்தையும் தரும். கம்பு, கேழ்வரகு கூழ் அருந்தலாம். கருப்பு உளுந்தில் களி, கஞ்சி செய்து கருப்பட்டி சேர்த்து உட்கொள்வது சிறந்தது. தினமும் பால் அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் ஒரு தடவை மட்டும் அருந்தலாம். குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார், முதியோர் பாலில் மஞ்சள்தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து அருந்துவது நல்லது.

கொரோனாவிலிருந்து மீள உதவும் இஞ்சிச்சாறு, அன்னாசிப்பூ தேநீர்!
சர்க்கரை, பால்:
அதேநேரத்தில், வெள்ளைச் சர்க்கரை சேர்ந்த இனிப்பு வகைகள் உண்ணாமலிருப்பது நல்லது. பால் மற்றும் அதுசார்ந்த உணவுப்பொருட்களை குறைவாக சேர்த்துக் கொள்வது நல்லது. நெய் சேர்க்கலாம்.
இவற்றைப் பின்பற்றினால், உலக அளவிலான மருத்துவமுறைகளுக்கு இணையாக நமது மருத்துவமும் வரும் என்பதில் மாற்றமில்லை. அந்த நாள் தொலைவில் இல்லை.

கொரோனாவிலிருந்து மீள உதவும் இஞ்சிச்சாறு, அன்னாசிப்பூ தேநீர்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ஒரு நிமிடத்தில் அமேசானுக்கு கிடைக்கும் வருமானம்… வாயை பிளக்க வைக்கும் டேட்டா!

நாம் அனைவரும் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏராளமான நிறுவனங்கள் நமக்கு சேவைகளை அளித்தாலும் உலகம் முழுவதும் அமெரிக்காவைச் சேர்ந்த ஐந்து நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சி வருகின்றன. கூகுள், அமேசான்,...

மக்கள் நீதி மய்யத்திலிருந்து பத்மபிரியா விலகல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்...

ஊரடங்கை மீறி வியாபாரம் – கோவையில் பிரபல ஜவுளிக்கடைக்கு சீல் வைப்பு!

கோவை கோவை ஒப்பணக்கார வீதியில் கொரோனா விதிமுறையை மீறி செயல்பட்ட பிரபல ஜவுளிக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கோவை...

கடலூர் ரசாயன ஆலை விபத்தில் 4 பேர் பலி… ரூ.3 லட்சம் இழப்பீடு!

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் ரசாயன ஆலையில் இன்று காலை பாய்லர் வெடித்து திடீரென வெடி விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் சிக்கிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த...
- Advertisment -
TopTamilNews