முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றது பொதுக்குழு!

 

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றது  பொதுக்குழு!

அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றது  பொதுக்குழு!

அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 1 நிமிடம் மவுனம் அனுசரிக்கப்பட்டது. பின்னர் வாசிக்கப்பட்ட தீர்மானத்தில், ஜெயலலிதா நினைவிடத்தை உலக புகழ் பெற்றதாக உருவாக்கும் அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

*முதல்வர் வேட்பாளராக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி அறிவிக்கப்பட்டது ஏகமனதாக ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

*கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அறிவித்த முதல்வர், மத்திய அரசுக்கு நன்றி என அதிமுக பொதுக்குழுவில் மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

*தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசு வேலையில் 20% இட ஒதுக்கீடு முறைப்படுத்திய முதல்வருக்கு பாராட்டு

*தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் திறந்த அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றது  பொதுக்குழு!

*முதல்வர் பழனிசாமி விமர்சித்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின் அவரது கட்சியினருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

*கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டில் முடிவு செய்ய ஓபிஎஸ் -ஈபிஎஸ் என்று பொதுக்குழுவில் அதிகாரம்.

*இலங்கையில் மாகாண கவுன்சில் முறையை ரத்து செய்யப் படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றது  பொதுக்குழு!

*உலக முதலீட்டாளர் மாநாடு நடத்திய தமிழக அரசுக்கு பாராட்டு.

*நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில் தமிழகத்தை சேர்த்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி.

*நிவர், புரெவி விவசாயிகளுக்கு ரூ 600 கோடி நிவாரணம் வழங்கிய மத்திய அரசுக்கு பாராட்டு

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றது  பொதுக்குழு!

*பொங்கல் பரிசுத் தொகை ரூ. 2,500 வழங்கியதற்கு பாராட்டு

*தமிழகத்தில் வாரிசு அரசியலை வீழ்த்த தீர்மானம்

*சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலமாக தமிழகத்தை முன்னேற்றயதற்கு முதல்வர் , துணை முதல்வருக்கு பாராட்டு

*அரசு பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்றதற்கு பாராட்டு

*தமிழகத்தில் பல்வேறு நல்ல திட்டங்களை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு பாராட்டு

*டிஜிட்டல் இந்தியா விருது பெற்ற தமிழக அரசுக்கு பாராட்டு