நடிகர்கள் காசை வாங்கிக்கொண்டு டீ சர்ட்டை மாட்டிக்கொள்கின்றனர்- காயத்ரி ரகுராம்

 

நடிகர்கள் காசை வாங்கிக்கொண்டு டீ சர்ட்டை மாட்டிக்கொள்கின்றனர்- காயத்ரி ரகுராம்

தமிழ் மொழி பேசும் இந்தியன் இந்தி தெரியாது என்று நடிகர்கள்தான் டீ சர்ட் போட்டுள்ளனர் என பாஜக கலை கலாச்சாரப் பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், “ஓட்டுக்கு எப்படி 2000 ரூபாய் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்குகிறார்களோ அதே போல் தான் டீ.சர்ட்டுக்கும் ஒரு விலை வைத்து அதை வாங்கி நடிகர்கள் அணிந்துள்ளனர். இந்த விஷயத்தை அவ்வாறாகவே பார்க்கவேண்டும். சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கண்டிக்கத்தக்கது. பாஜக என்றுமே பெண்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவாக இருக்கும். திரைத்துறைக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கலைஞர்களுக்கு புத்துணர்ச்சி கிடைத்துள்ளது.

நடிகர்கள் காசை வாங்கிக்கொண்டு டீ சர்ட்டை மாட்டிக்கொள்கின்றனர்- காயத்ரி ரகுராம்

கொரோனா ஊரடங்கால் பலர் பாதிப்புக்குள்ளாகி வந்த சூழ்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளால் மீண்டும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது. முதலில் உடல் நிலையை பார்த்துவிட்டு தான் திரைத்துறையில் கூடுதல் தளர்வுகளைப் பற்றி யோசிக்க வேண்டும், திரையரங்கில் படம் வெளியிடாமல் ஓடிடி தளத்தில் படம் வெளியிடுவது அந்தந்த தயாரிப்பாளர்களின் விருப்பம்” என தெரிவித்தார்.