கவுதம் காம்பீரின் தந்தையின் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் திருடப்பட்டது

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரின் தந்தையின் கார் திருடப்பட்டுள்ளது.

டெல்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரின் தந்தையின் கார் திருடப்பட்டுள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பாஜக சட்டமன்ற உறுப்பினருமான கவுதம் காம்பீரின் தந்தையின் கார் திருடப்பட்டுள்ளது. டெல்லியின் ராஜேந்திர நகரில் உள்ள அவர்களது வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரை திருடர்கள் திருடி சென்றனர். கடந்த புதன்கிழமை மதியம் 3.30 மணிக்கு தனது வீட்டின் முன்னர் அந்த காரை நிறுத்தினர். அடுத்தநாள் காலை அந்த கார் காணாமல் போனது தெரியவந்தது. அதன் பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். திருடர்கள் ஒரு காரில் வந்து காம்பீரின் தந்தையின் காரை வேகமாக திருடிச் சென்றது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த திருடர்களின் முகம் சிசிடிவி காட்சியில் தெளிவாக தெரியவில்லை. அதனால் வழக்கு பதிந்து அவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

- Advertisment -

Most Popular

நரை முடி பிரச்சினைக்கு கடுக்காய், நெல்லிக்காய் சாப்பிடுங்கள்!

நரை முடி... வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் ஒன்று. அமேசான் காட்டில் கிடைக்கும் அரியவகை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட இந்த எண்ணெயை பயன்படுத்தினால் முடி செழித்து வளரும், நரைமுடி விலகும்...

வேலூரில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,827 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. நேற்று...

அறையில் துர்நாற்றம்… `ஷாக்’கான உறவினர்கள்!-கொரோனா அச்சத்தால் உயிரை மாய்த்த தனியார் ஊழியர்?

சென்னை மதுரவாயல் பகுதியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் கொரோனா அச்சத்தால் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பூட்டிய அறைக்குள் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆந்திரா மாநிலத்தை...

என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13ஆக உயர்வு!

தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் என்.எல்.சி அனல் மின் நிலையம் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த 1 ஆம்...
Open

ttn

Close