Home தமிழகம் கொள்ளிடம் பகுதியில் கெயில் எரிவாயு பதிப்புக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

கொள்ளிடம் பகுதியில் கெயில் எரிவாயு பதிப்புக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

கொள்ளிடம் பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்று அறிவித்துவிட்டு கெய்ல் குழாய் பதிக்கப்படுவதற்கு டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (ஆகஸ்ட் 12) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட கொள்ளிடம் பகுதியில் விவசாய நிலங்களின் வழியாக கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவது கண்டனத்திற்குரியது.


நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் தோண்டியுள்ள சுமார் 20 கிணறுகளிலிருந்து செம்பனார்கோவில் அருகே உள்ள மேமாத்தூருக்கு எரிவாயுவை எடுத்துச் செல்ல 2 ஆண்டுகளுக்கு முன்பு விளைநிலஙகள் வழியாக குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.


அப்போது பொதுமக்கள், சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்த எதிர்ப்பு காரணமாக அது நிறுத்தப்பட்டது. தற்போது, கொரோனா ஊரடங்கு காலத்திலும் சீர்காழி அருகே உள்ள திருநகரியில் இருந்து பழைய பாளையம் வரையிலான புதிய பாதையில் விளைநிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை கெயில் நிறுவனம் மீண்டும் தொடங்கியிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.


இந்த பகுதிகளையும் உள்ளடக்கிதான் கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் பழனிசாமி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அறிவித்தார். இப்போது அங்கே விளைநிலங்களை 5அடி ஆழத்திற்குத் தோண்டி எரிவாயு குழாய்களைப் பதித்தால் அது எப்படிப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகும்?


இதற்கெல்லாம் ஆதரவு தெரிவிக்கும் விதமாகவே ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான விதிமுறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை’ என்று தமிழக அரசு கடந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறதோ என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
வெற்று வேளாண் மண்டல அறிவிப்புக்காக பட்டம் சூட்டிக்கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை இருக்குமானால் விளைநிலங்களையும், விவசாயத்தையும் பாதிக்கும் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாவதையும் ஆறுகளிலிருந்து மணல் சுரண்டப்படுவதையும் தடுப்பதற்கான விதிமுறைகளை உடனடியாக வகுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

தேர்தலுக்காக சிறுபான்மையினரின் நண்பர்களைப் போல நடிப்பவர்கள் நாங்கள் அல்ல- ஸ்டாலின்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – திமுக உறவு என்பது தேர்தல்கால உறவல்ல, நீண்டகாலமாக இருந்து வரும் கொள்கை உறவு என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சயம்… விரக்தியில் ராணுவ வீரர் தற்கொலை…

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் அருகே காதல் தோல்வியால் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம்...

சென்னையில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும்- ஸ்டாலின் சபதம்

சென்னையில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும் என திமுக தலைவர் முக. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னை மாதவரத்தில் நடைபெற்ற உங்கள்...
TopTamilNews