மோடி பிறந்தநாள் விழாவில் வெடித்து சிதறிய கேஸ் பலூன் : 20 பேர் காயம்!

 

மோடி பிறந்தநாள் விழாவில் வெடித்து சிதறிய கேஸ் பலூன் : 20 பேர் காயம்!

பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கேஸ் பலூன்கள் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை கொடுத்த்துள்ளது.

பாஜக விவசாய அணி சார்பில் சென்னை அம்பத்தூர் பாடியில் , பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பாடி சிவன் கோயில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பாஜக விவசாய அணி துணை தலைவர் முத்துராமன் வருகை புரிந்திருந்தார்.

மோடி பிறந்தநாள் விழாவில் வெடித்து சிதறிய கேஸ் பலூன் : 20 பேர் காயம்!

இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரம் கேஸ் பலூன்கள் பறக்க விட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பட்டாசு தீப்பொறி பட்டு அங்கிருந்த 500 கேஸ் பலூன்கள் வெடிக்க தொடங்கின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மோடி பிறந்தநாள் விழாவில் வெடித்து சிதறிய கேஸ் பலூன் : 20 பேர் காயம்!

இந்த விபத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட 20 பேர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் உரிய அனுமதி பெறாமல் அஜாக்கிரதையாக விழாவை கொண்டாடிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பிரபாகரன் மற்றும் சிறப்பு விருந்தினர் முத்துராமன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.