ஆப்பிள் போன் ஆட்டைய போடும் திருடர்கள் -புது போன் போல் மாற்றி விற்கும் வியாபாரிகள் -வெளியான ரகசியம்

ஆப்பிள் போன் ஆட்டைய போடும் திருடர்கள் -புது போன் போல் மாற்றி விற்கும் வியாபாரிகள் -வெளியான ரகசியம்

திருடப்பட்ட ஐ போன்களை வாங்கி,அதை  புது போன் போல மாற்றி  விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் மொபைல் போன் கடையின் உரிமையாளர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர் .

ஆப்பிள் போன் ஆட்டைய போடும் திருடர்கள் -புது போன் போல் மாற்றி விற்கும் வியாபாரிகள் -வெளியான ரகசியம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் அந்தேரியில் உள்ள ஒரு மாலில்  ரெய்ஸ் கிலானி என்பவர் நடத்தி வந்த கடையில் போலியான போன்கள் விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது .இதனால் அங்கு ரெய்டு நடத்திய போலீஸ் அங்கிருந்து  சுமார் 10 லட்சம் மதிப்புள்ள 52 தொலைபேசிகளை  பறிமுதல் செய்துள்ளனர். அப்போது போலீசார்  ஆசிப் டோடியா மற்றும் தரிஃப் ஷேக் ஆகிய இருவரையும் கைது செய்தனர் .

அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில் ,பல திடுக்கிடும் தகவல் வெளியானது .இந்த ஆப்பிள் போன் தொழில்நுட்பத்தில் , ஜெயில்பிரேக்கிங் என்பது ஐபாட், ஐபோன் மற்றும் ஐபாட் போன்ற ஆப்பிள் தயாரிப்புகளை பாதுகாக்க வடிவமைக்கப்பட்டது . இது  ஆப்பிளின் ஆப் ஸ்டோரால் அங்கீகரிக்கப்படாத பயன்பாடுகளை கண்டுபிடிக்க  உதவுகிறது

கெய்லானியின் கடையில் போலீசாரின் சோதனையின்போது, ​​காவல்துறையினர் இரண்டு ஜெயில்பிரேக்கிங் டிஜிட்டல் கருவிகளையும்பல ரகசிய  ஹார்ட் டிரைவையும் மீட்டனர்.மும்பையில் இயங்கும் இந்த மோசடி  கும்பல், சந்தையில் திருட்டு தொலைபேசிகளை விற்பனை செய்வதற்கு முன்பு, கணினியை  உடைக்க எவ்வாறு மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள நிபுணர்களின் உதவியை போலீசார் நாடியுள்ளார்கள்

அந்த கும்பல் எந்தவொரு கடவுச்சொற்களையும் பயன்படுத்தாமல், திருடப்பட்ட தொலைபேசிகளை வடிவமைத்துள்ளனர் . இந்த குற்றத்தை செய்த முகமது அரிபி, மோமோ ஆகியோரை போலீசார்  தேடி வருகின்றனர்.

ஆப்பிள் போன் ஆட்டைய போடும் திருடர்கள் -புது போன் போல் மாற்றி விற்கும் வியாபாரிகள் -வெளியான ரகசியம்