ரபேல் விமானத்தில் விநாயகர் : பாஜக அலுவலகத்தில் களைக்கட்டும் விநாயகர் சதுர்த்தி!

 

ரபேல் விமானத்தில் விநாயகர் : பாஜக அலுவலகத்தில் களைக்கட்டும் விநாயகர் சதுர்த்தி!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவவும், ஊர்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து கொண்டாடி வருகின்றனர்.

ரபேல் விமானத்தில் விநாயகர் : பாஜக அலுவலகத்தில் களைக்கட்டும் விநாயகர் சதுர்த்தி!

இந்நிலையில் பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டப்பட்டு வருகிறது.

ரபேல் விமானத்தில் விநாயகர் : பாஜக அலுவலகத்தில் களைக்கட்டும் விநாயகர் சதுர்த்தி!

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை விளக்கும் வகையில் ரபேல் விமானத்தில் விநாயகர் அமர்ந்தபடி அருகே வாசகங்களை வைத்து விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி தினத்தை பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.