ஹோட்டலில் ஜாலி.. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜஸ்தான் மக்களை அவமதிக்கிறார்கள்.. மத்திய அமைச்சர் தாக்கு

 

ஹோட்டலில் ஜாலி.. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜஸ்தான் மக்களை அவமதிக்கிறார்கள்.. மத்திய அமைச்சர் தாக்கு

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அமைதியாக நடந்து கொண்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். இதனையடுத்து கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகருக்கு காங்கிரஸ் கட்சி பரிந்துரை செய்தது. உடனே சபாநாயகரும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தகுதி நீக்கம் நோட்டீஸ் அனுப்பினார். இதனை எதிர்த்து சச்சின் பைலட் உள்பட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஹோட்டலில் ஜாலி.. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜஸ்தான் மக்களை அவமதிக்கிறார்கள்.. மத்திய அமைச்சர் தாக்கு

இதற்கிடையே அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து வரும் 14ம் தேதியன்று தொடங்கும் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் அசோக் கெலாட் தனது அரசுக்கு பெரும்பான்மை உள்ளதை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பா.ஜ.க. பக்கம் தாவி விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் அவர்கள் அனைவரும் ஜெய்சல்மரில் உள்ள சூர்யாகர் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 31ம் தேதி முதல் அங்கு இருக்கும் அவர்கள் படம் பார்ப்பது, பாடுவது, யோகா என உல்லாசமாக பொழுதை கழித்து வருவது அங்கியிருந்து வெளியாகும் வெளிப்படுத்துகின்றன.

ஹோட்டலில் ஜாலி.. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜஸ்தான் மக்களை அவமதிக்கிறார்கள்.. மத்திய அமைச்சர் தாக்கு

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஹோட்டலில் தங்கியிருப்பதை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில், சூர்யாகர் ஹோட்டலில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் போட்டாக்கள், திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டு விருந்தினர்கள் இசை மற்றும் உணவுகளை அனுபவித்து வருவது போல… கோவிட்-19 தொற்றுநோய், வெட்டுக்கிளி தாக்குதல் மற்றும் தோல்விஅடைந்த நிர்வாகம் ஆகியவற்றுக்கு எதிராக போராடும் மாநில மக்களுக்கு அவமானத்தை சேர்க்கிறது என பதிவு செய்து இருந்தார்.