இணையதளம் வழியாக ஜி20 மாநாடு- சவுதி அரேபியா அறிவிப்பு !

 

இணையதளம் வழியாக ஜி20 மாநாடு- சவுதி அரேபியா அறிவிப்பு !

ஜி 20 நாடுகளின் மாநாடு இந்த ஆண்டு இணைய வழியில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சவுதி அரேபியா வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அனைத்து சந்திப்புகளையும் இணைய வழியில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜி20 மாநாடும் இணைய வழியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இணையதளம் வழியாக ஜி20 மாநாடு- சவுதி அரேபியா அறிவிப்பு !

வளர்ச்சி அடைந்த மற்றும் வளரும் 20 நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜி 20 மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான மாநாடு சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் நவம்பர் 21 மற்றும் 22 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய சூழல் காரணமாக, கடந்த மாதம் ஜி 20 நாடுகளின் தலைவர்களுடன் சவுதி அரேபிய மன்னர் சல்மான் ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து ஆன்லைன் வழியாக மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் ஜி 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் கலந்து கொண்டு உலக பொருளாதார சூழல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.