மூட்டை முடிச்சுகளுடன் பைக்கில் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் : காலியாகும் சென்னை!

மூட்டை முடிச்சுகளுடன் பைக்கில் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் : காலியாகும் சென்னை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது தமிழக அரசு. இருப்பினும் நாளை 12 மணி வரை மளிகை கடைகள் , இறைச்சிக்கடைகள் முதலியவை இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் தனியார், அரசு பேருந்துகள், வாடகை டாக்சி, ஆட்டோ ஆகிய வாகன போக்குவரத்திற்கு நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 14 நாட்களும் டாஸ்மாக் இயக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூட்டை முடிச்சுகளுடன் பைக்கில் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் : காலியாகும் சென்னை!

இந்நிலையில் சென்னையில் உள்ள மக்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். நாளை முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் பொது முடக்கம் நீட்டிக்கப்படலாம் என்ற அச்சத்தில் பெரும்பாலானோர் தங்களின் இருசக்கர வாகனங்களில் குடும்பத்துடன் சொந்த ஊர்களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகள் இதனால்கூட்ட நெரிசலால் நிரம்பி வழிந்து உள்ளது. அங்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. பைக்கில் தேவையான மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு, குழந்தைகளுடன் செல்லும் பலரையும் காணமுடிகிறது.

மூட்டை முடிச்சுகளுடன் பைக்கில் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் : காலியாகும் சென்னை!

வெளிமாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் தமிழக அரசால் இயக்கப்படவுள்ளது. இதனால் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதி வருவது குறிப்பிடத்தக்கது.