வேலூரில் வேகமெடுத்த கொரோனா! ஜூலை 31 வரை முழு ஊரடங்கு

 

வேலூரில் வேகமெடுத்த கொரோனா! ஜூலை 31 வரை முழு ஊரடங்கு

வேலூரில் இன்று மேலும் 154 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 4, 359 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அம்மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 உயர்ந்துள்ளது.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் கொரோனா பரவல் காரணமாக ஜூலை 24ம் தேதி முதல் ஜூலை 31 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மருந்துக்கடைகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை தவிர்த்து, மளிகை கடை நகைக் கடை துணிக்கடை ஹார்ட்வேர் உள்ளிட்ட அனைத்து கடைகளும் 23.07.2020 நள்ளிரவு முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை மூடப்படுகின்றன.

வேலூரில் வேகமெடுத்த கொரோனா! ஜூலை 31 வரை முழு ஊரடங்கு

8 நாட்களுக்கு தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சிறப்பு முகாம்கள் மூலம்பரிசோதனை மேற்க்கொள்ளப்படும் என்றும் தங்களுக்கு தேவையான பொருட்களை மக்கள் இன்றும் நாளையும் வாங்கி வைத்துக்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.