கோவையில் முழு ஊரடங்கு எதிரொலி: ஊரை காலி செய்யும் மக்கள்!!

 

கோவையில் முழு ஊரடங்கு எதிரொலி: ஊரை காலி செய்யும் மக்கள்!!

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதால் இன்று மாலை 5 மணி முதல் மூன்று நாட்களுக்கு முழு முடக்கத்தை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. கோவையில் , வழக்கமாக கடைபிடிக்கப்படும் ஞாயிற்றுக்கிழமை முழுமுடக்கம் இந்த வாரம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கே தொடங்குகிறது. 27 ஆம் தேதி திங்கள்கிழமை காலை 6 மணி வரை எந்த தளர்வுகளும் இல்லாத முழுமுடக்கம் நடைமுறைபடுத்தப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய கடைகளை தவிர வேறு எந்த கடைகளும் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் முழு ஊரடங்கு எதிரொலி: ஊரை காலி செய்யும் மக்கள்!!

இந்நிலையில் இன்று மாலை 5மணி முதல் ஊரடங்கு அமலான நிலையில், அதற்கு சில மணி நேரம் முன்பு உக்கடம் ஆத்துப்பாலம் சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் இருசக்கர வாகனம் மற்றும் காரில் ஊரைவிட்டு வெளியேற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மக்கள் கொரோனாவிற்கு பயப்படுகிறார்களோ இல்லையோ ஊரடங்கிற்கு பயப்படுகிறார்கள் என்பது இந்த புகைப்படங்கள் மூலம் தெளிவாக தெரிகிறது.