பெரியகுளத்தில் மருத்துவரால் வந்த விபரீதம்! தொற்றுடன் மருத்துவம் பார்த்த கொடுமை

 

பெரியகுளத்தில் மருத்துவரால் வந்த விபரீதம்! தொற்றுடன் மருத்துவம் பார்த்த கொடுமை

தேனிமாவடம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஓய்வு பெற்ற அரசு குழந்தைகள் மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் ஓய்வு பெற்ற பிறகு தனியாக வெளியில் மருத்துவமனை அமைத்து குழந்தைகளுக்கு சிகிச்சை பார்த்துவந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கு காய்ச்சல், இருமல், சளி போன்ற பாதிப்பு இருந்துள்ளது. சாதாரண காய்ச்சல்தான் எண்ணிய அவர், அதற்கான மருந்தை எடுத்துகொண்டு தொடர்ந்து குழந்தைகளுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

பெரியகுளத்தில் மருத்துவரால் வந்த விபரீதம்! தொற்றுடன் மருத்துவம் பார்த்த கொடுமை
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்த அவருக்கு தொற்று உறுதியானது. மேலும் அவரின் குடும்பத்தார் மூன்று நபர்களுக்கு நோய் தொற்று உறுதியானது. இதேபோல் மருத்துவரின் வீட்டை சுற்றியுள்ள 6 நபர்களுக்கு கொரோன தொற்று உறுதியானது. மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்த குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்கு தொற்று பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து பெரியகுளம் நகராட்சி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இன்று மேலும் 13 நபர்களுக்கு கொரோன தொற்று உறுதியானது.

பெரியகுளத்தில் மருத்துவரால் வந்த விபரீதம்! தொற்றுடன் மருத்துவம் பார்த்த கொடுமை

இதையடுத்து பெரியகுளம் சுற்றுவட்டாரப்பகுதி முழுவதும் நாளை முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பரிசோதனை பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் முழுமையாக அனைத்து கடைகளும் அடைக்கப்படவேண்டும் என்றும், நகராட்சிக்கு உட்பட்ட மற்ற அனைத்து பகுதிகளிலும் காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே அனைத்து கடைகளை திறக்கவும் நகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.