முழு ஊரடங்கு பலன் தராது! – விளக்குகிறார் பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் விளக்கம்

 

முழு ஊரடங்கு பலன் தராது! – விளக்குகிறார் பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் விளக்கம்

இந்தியர்கள் அடிக்கடி கை கழுவும் பழக்கம் உள்ளவர்கள். கையைக் கழுவுவதாலோ முழு ஊரடங்கு கொண்டுவருவதாலோ கொரோனாவைக் கட்டுப்படுத்திவிட முடியாது என்று பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த செய்ய வேண்டிய நடவடிக்கை பற்றிய கலந்துரையாடல் புதுச்சேரியில் நடந்தது. புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி பங்கேற்றுப் பேசினார்.

முழு ஊரடங்கு பலன் தராது! – விளக்குகிறார் பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் விளக்கம்அப்போது அவர், “கொரோனா வைரஸ் கைகள் மூலமாக 80 சதவிகிதம் பரவுகிறது. கொரோனா பாதிப்பு உள்ளவர் தும்மிய நீர்த்திவளையை சுவாசிக்கும்போது 20 சதவிகிதம் பரவுகிறது. இந்தியாவில் உணவருந்த, மலம் – சிறுநீர் கழிக்கும்போது என ஒரு நாளைக்கு சுமார் ஆறு முறை மக்கள் கை கழுவுகிறார்கள். ஐரோப்பா, அமெரிக்கா போன்ற குளிர் பிரதேசங்களில் கை கழுவும் பழக்கம் குறைவு.
கையில் உள்ள எண்ணெய் பிசுக்கு சோப்பு போட்டுக் கழுவும்போது கரைகிறது. சானிடைசர்கள் கையில் உள்ள கிருமியை அழிக்கும். ஆனால் அழுக்கு, அழிந்த கிருமியை போக்காது. எனவே, சானிடைசரை விட கை கழுவுவதே சிறந்தது.

முழு ஊரடங்கு பலன் தராது! – விளக்குகிறார் பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் விளக்கம்முழு ஊரடங்கு கொரோனாவைக் கட்டுப்படுத்திவிடும் என்று பலரும் எண்ணுகின்றனர். இஸ்ரேலில் கொரோனாத் தொற்று பரவத் தொடங்கிய போது நோய் தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ள முதியவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் வெளியே வர தடை விதிக்கப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தி நல்ல நிலையில் உள்ள இளைஞர்கள் உள்ளிட்டோர் வெளியே வர அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு அறிகுறிகளுடன் அறிகுறியில்லாமலும் கொரோனா வந்துவிட்டு மறைந்துவிட்டது. இதன் மூலமாக சமூக நோய் எதிர்ப்புத் திறனை அந்த நாட்டு மக்கள் பெற்றார்கள். தற்போது அங்கு இயல்புநிலை திரும்பிவிட்டது. இந்தியாவிலும் இதுபோன்ற ஊரடங்கைப் பின்பற்ற வேண்டும்.

முழு ஊரடங்கு பலன் தராது! – விளக்குகிறார் பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் விளக்கம்இந்தியாவில் உள்ள முதியவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகளை தனிமைப்படுத்த வேண்டும். வீட்டிலேயே ஆக்சிமீட்டர் வைத்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும். ஆக்சிஜன் அளவு 70 முதல் 100 மி.மீ வரை இருந்தால் இயல்புநிலை. அதற்கு குறைவாக இருந்தால் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கொரோனாவுக்கான லேசான அறிகுறி உள்ளவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். அனைவருக்கும் ஊட்டச்சத்து மாத்திரைகள் கொடுக்க வேண்டும். பொது இடங்களை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வரலாம்” என்றார்.