மீண்டும் முழு ஊரடங்கா? ராதாகிருஷ்ணன் விளக்கம்

 

மீண்டும் முழு ஊரடங்கா? ராதாகிருஷ்ணன் விளக்கம்

மீண்டும் லாக் டவுன் போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழக சுகாதார துறை செயலாளர் திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் முககவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை பொது மக்கள் பின்பற்றவுதை கண்காணிக்க தமிழக சுகாதார துறை செயலாளர் டாக்டர் இராதா கிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், சுகாதார துறை அதிகாரிகள் முன்னிலையில் திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் பயணிகளிடமும், நடத்துனர்கள் ஓட்டுனர்களிடமும் முக கவசம் அணிவது குறித்தும், சமூக விலகலை கடைபிடிப்பது குறித்தும் எடுத்துரைத்தார்.

மீண்டும் முழு ஊரடங்கா? ராதாகிருஷ்ணன் விளக்கம்

முக கவசம் அணியாமல் வரும் பயணிகளை பேருந்தில் ஏற்ற அனுமதிக்க கூடாது என்றும், இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுருத்தினார். அதனைத் தொடர்ந்து மார்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சுகாதார துறை செயலர், கடைக்கு வரும் பொது மக்கள் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும், முக கவசம் எப்படி அணிய வேண்டும் என்பதை அணிவித்து காண்பித்தார்.

திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட போது கொரோனா சிறப்பு வார்டில் மருத்துவர்கள் செவிலியர்கள் முழு கவச உடை அணிந்து பணியாற்றுவது போல் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் முழு கவச உடை அணிந்து சிறப்பு வார்டில் ஆய்வு மேற்கொண்டனர்.

மீண்டும் முழு ஊரடங்கா? ராதாகிருஷ்ணன் விளக்கம்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறைசெயலர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அதை பொது மக்கள் கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணித்தாகவும், அவ்வாறு கண்காணித்த போது அரசின் விதிமுறைகளை பின்பற்றாததால் தமிழகத்தில் இது வரை 50 ஆயிரம் பேரிடம் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாவும் தெரிவித்தார்.

திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்திருந்தாலும், கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமானாலும் தீவிர மருத்துவ முகாம் அமைத்து கட்டுப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மீண்டும் முழு ஊரடங்கா? ராதாகிருஷ்ணன் விளக்கம்

அடுத்ததாக, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என வாட்ஸ் ஆப் பில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.