இன்று மாலை முதல் தேனியில் முழு ஊரடங்கு அமல்

 

இன்று மாலை முதல் தேனியில் முழு ஊரடங்கு அமல்

நோய்த்தொற்றல் அதிகரித்துவருவதால் தேனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வரவிருக்கிறது.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சென்னையில் மட்டும் அதிகரித்த இந்த எண்ணிக்கை தற்போது பல மாவட்டங்களிலும் அதிகரித்துவருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் லாக்டெளன் தொடங்கியதிலிருந்தே கட்டுப்பாடுகள் அதிகம் விதித்த நிலையில் நேற்று மதுரையிலும் முழு லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. தற்போது தேனியும் அந்நடவடிக்கை தொடரவிருக்கிறது.

இன்று மாலை முதல் தேனியில் முழு ஊரடங்கு அமல்

இதுகுறித்துத் தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கும் அறிக்கையில், ‘தேனி மாவட்டத்தில் பெரியகுளம் நகராட்சி ஏற்கெனவே முழுமையான கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டுக் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகிறாது. தற்போது மாவட்டத்தில் கொரோன நோய் தொற்று அதிகளவில் இருப்பதால் தொற்றின் பரவலைக் குறைக்கும் பொருட்டு இதர நகராட்சிகளான போடிநாயக்கனூர், தேனி, சின்னமனூர், கம்பம் மற்றும் கூடலூர் நகராட்சி பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் 24.06.2020 அன்று மாலை முதல் செயல்படுத்த உத்தரவிடப்படுகிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இன்று மாலை முதல் தேனியில் முழு ஊரடங்கு அமல்

அனுமதிக்கப்பட்டவையாக, அத்தியாவசிய சேவைகளான, காய்கறிகடை, பழங்கள், பால் மற்றும் குடிநீர், மளிகைப் பொருட்கள், பெட்ரோல் பங்குகள், நடமாடும் காய்கறி வண்டிகள் (காலை 6 மணிமுதல் மதியம் 2 மணி வரை மட்டுமே) அனுமதிக்கப்படும். இவற்றோடு மருத்துவமனைகள், மருந்து பொருட்கள், மருத்துவப் பரிசோதனை மையங்கள், ஆம்புலன்ஸ்களுக்கு அனுமதி உண்டு. கார், வங்கி, தொழிற்சாலைகள் நீதிமன்றங்கள், ஊடகங்கள், இறைச்சி கடைகள் ( (காலை 6 மணிமுதல் மதியம் 2 மணி வரை மட்டுமே) அம்மா உணவுகம் உள்ளிட்ட சில அனுமதிக்கப்பட்டுள்ளன.

அனுமதிக்கப்படாதவையாக், டீ கடைகள், பேக்கரிகள், நகைக் கடைகள், ஜவுளி கடைகள், பெட்டிக் கடைகள், பர்னிச்சர் கடைகள், வீட்டு உபயோகப் பொருள் விற்பனை கடைகள், டிவி விற்கும் மற்றும் பழுதுப் பார்க்கும் கடைகள், சாலையோர உணவு கடைகள், பேன்ஸி ஸ்டோர்ஸ், மொபைல் கடைகள் ஆகியவற்றிற்கு அனுமதி கிடையாது.