ரூ.14 ஆயிரம் கோடி பண மோசடி செய்து எஸ்கேப் ஆன இந்திய தொழிலதிபரை காணவில்லை!

 

ரூ.14 ஆயிரம் கோடி பண மோசடி செய்து எஸ்கேப் ஆன இந்திய தொழிலதிபரை காணவில்லை!

பிரபல தொழிலதிபர்கள் வங்கிகளில் கடன் வாங்குவதும், கொடுக்காமல் எஸ்கேப் ஆவதும் இந்தியாவில் அன்றாட நிகழ்வாகிவிட்டது. அந்தச் செய்திகள் புதிதும் அல்ல. நிரவ் மோடி, மல்லையா ஆகியோரை உதாரணமாகக் காட்டலாம். அவர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாகி இந்திய அரசுக்கே தண்ணி காட்டுகிறார்கள். அவர்களே இங்கே அழைத்துவர இந்தியா படாத பாடு படுகிறது. தற்போது அந்த வரிசையில் மெகுல் சோக்சி என்ற தொழிலதிபர் இணைந்திருக்கிறார்.

ரூ.14 ஆயிரம் கோடி பண மோசடி செய்து எஸ்கேப் ஆன இந்திய தொழிலதிபரை காணவில்லை!

இவர் கொஞ்சம் புதிய கேஸ். அதாவது ஏற்கெனவே இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று வெளிநாட்டில் இருந்தார். இப்போது அந்த இடத்தையும் காலிசெய்துவிட்டாரா அல்லது காணாமல் போய்விட்டாரா என்று தெரியவில்லை. வைர வியாபாரியான மெகுல் சோக்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்றுள்ளார். அதனைத் திருப்பிச் செலுத்தாமல் 2018ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து எஸ்கேப் ஆகி ஆன்டிகுவாவில் தங்கியிருந்தார். இதற்கு முன்பாகவே உஷாராக 2017ஆம் ஆண்டு அந்நாட்டில் குடியுரிமை பெற்றிருக்கிறார்.

ரூ.14 ஆயிரம் கோடி பண மோசடி செய்து எஸ்கேப் ஆன இந்திய தொழிலதிபரை காணவில்லை!

இவரை இந்தியாவிற்கு அழைத்துவர இந்திய அரசு ஆன்டிகுவா அரசிடம் முறையிட்டது. அதன் பொருட்டு குடியுரிமையை ரத்துசெய்தது. ஆனால் அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து வெற்றிகண்டார். அதன்மூலம் ஆன்டிகுவாவிலேயே தங்கியிருந்தார். இச்சூழலில் கடந்த 23ஆம் தேதி ஜாலி ஹார்பருக்கு மெகுல் சோக்ஸி சென்றார். அப்போதிருந்து மெகுல் சோக்ஸியைக் காணவில்லை. இதை மெகுல் சோக்ஸியின் வழக்கறிஞர் விஜய் அகர்வாலும் உறுதி செய்திருக்கிறார். ஆன்டிகுவா காவல் துறையினர் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவரை யாரும் கடத்திவிட்டார்களா அல்லது யாருக்கும் தெரியாமல் தலைமறைவாகிவிட்டாரா என்று தெரியவில்லை.