களமிறங்கிய விஜயகாந்த் : பிப்ரவரி 25 முதல் தேமுதிகவில் விருப்ப மனு அளிக்கலாம்

களமிறங்கிய விஜயகாந்த் : பிப்ரவரி 25 முதல் தேமுதிகவில் விருப்ப மனு அளிக்கலாம்

பிப்ரவரி 25 முதல் தேமுதிகவில் விருப்ப மனு அளிக்கலாம் என கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

களமிறங்கிய விஜயகாந்த் : பிப்ரவரி 25 முதல் தேமுதிகவில் விருப்ப மனு அளிக்கலாம்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் கடந்த 17 ஆம் தேதி முதல் விருப்ப மனு அளித்து வருகின்றனர். அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா பிறந்தநாளான 24ஆம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

களமிறங்கிய விஜயகாந்த் : பிப்ரவரி 25 முதல் தேமுதிகவில் விருப்ப மனு அளிக்கலாம்

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் தேமுதிமுக சார்பில் போட்டியிட பிப்ரவரி 25 முதல் விருப்ப மனு அளிக்கலாம். பிப்ரவரி 25 முதல் மார்ச் 3 வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம். தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிக்கு ரூபாய் 15,000, தனி தொகுதிக்கு ரூபாய் 10,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிக்கு ரூபாய் 10 ஆயிரம் கட்டணமும், தனித்தொகுதிக்கு ரூ. 5 ஆயிரம் கட்டணமும் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.